உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் 108 விளக்கு பூஜை, அமைச்சர் துவங்கி வைத்தார்

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் 108 விளக்கு பூஜை, அமைச்சர் துவங்கி வைத்தார்

காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் நடந்த 108 விளக்கு பூஜையை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் 108 திருவிளக்கு பூஜை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 12 கோயில்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயிலும் தேர்வு செய்யப்பட்டு நேற்று 108 விளக்கு பூஜை நடந்தது. பூஜையை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். மாங்குடி எம்எல்ஏ, காரைக்குடி சேர்மன் முத்துத்துரை, இணை ஆணையர் பழனிக்குமார், உதவி ஆணையாளர் செல்வகுமார், தக்கார் ஞானசேகர், செயல் அலுவலர் நாராயணி, கணக்கர் அழகு பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !