மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
1181 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
1181 days ago
குனியமுத்தூர் : குனியமுத்தூர் அடுத்த பி.கே.புதூர் அருகே அன்னை சத்யா நகரிலுள்ள அருள்சக்தி மாரியம்மன் கோவில் ஐந்தாமாண்டு பூச்சாட்டு விழா கடந்த, 3ல் விநாயகர் வேள்வியுடன் துவங்கியது. 7ல் பொரி சாட்டுதல், கம்பம் நடுதல் நடந்தன. 8 முதல், 13 வரை தினமும் பூவோரடு எடுத்து விளையாடுதல் நடந்தது.நேற்று முன்தினம் இரவு ஊர் முறை அழைப்பு, அம்மன் அழைத்தல் நடந்தன. நேற்று காலை சக்தி கரக ஊர்வலம், அம்மன் சிம்ம வாகனத்தில் அலங்காரத்துடன் பின் தொடர கோவிலை வந்தடைந்தது. பொங்கல் வழிபாடு நடந்தது. மாலை மாவிளக்கு ஊர்வலம், வழிபாடு நடந்தன. திரளானோர் பங்கேற்றனர். இன்று காலை அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வர மஞ்சள் நீராடுதல், முளைப்பாரி விடுதல் நடந்தன. நாளை மறுதினம் காலை, 9:00 மணிக்கு மறு பூஜை தொடர்ந்து அன்னதானத்துடன் விழா நிறைவடைகிறது.
1181 days ago
1181 days ago