பழநி மலைக்கோயிலில் உற்சவ சாந்தி விழா
ADDED :1245 days ago
பழநி, பழநி வைகாசி விசாக உற்சவத்தை முன்னிட்டு உற்சவ சாந்தி விழா பழநி மலைக்கோயில் கைலாச நாதர் சன்னதியில் நடைபெற்றது.
பழநி வைகாசி விசாக உற்சவ விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் உள்ள கைலாசநாதர் சந்நிதியில் வெள்ளிக் கலசம் வைத்து சாந்தி ஹோமம் செய்தனர். உச்சிகால பூஜையில் பழநி முருகன் சன்னதியில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு தீபாராதனை நடந்தது. கந்தவிலாஸ் செல்வகுமார், பிரேமா, நவீன் விஷ்ணு, நரேஷ் குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமிர்தம் குருக்கள், செல்வசுப்பிரமணியம் குருக்கள், பேஷ்கார் செல்வம் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர். மாலையில் பெரிய கோயிலின் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.