பிரதமர் தாய்க்கு 100 : ராமேஸ்வரத்தில் ஆயுஷ் ஹோமம்
ADDED :1241 days ago
ராமேஸ்வரம்: பிரதமர் மோடி தாய்க்கு 100 வது பிறந்த தினம் யொட்டி அவர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி ராமேஸ்வரத்தில் பா.ஜ.,வினர் ஆயுஷ் ஹோமம் செய்து தரிசித்தனர்.
நேற்று பிரதமர் மோடியின் தாய்க்கு 100 வயது யொட்டி குஜராத்தில் உள்ள அவரது வீடுக்கு பிரதமர் மோடி சென்று ஆசி பெற்றார். இதனையொட்டி பிரதமர் தாய் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி நேற்று ராமேஸ்வரம் காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் பா.ஜ., ஏற்பாட்டில் புரோகிதர்கள் மூலம் கணபதி, நவக்கிரக ஹோமம் மற்றும் மிருத்யுஞ்சய, ஆயுஷ் யாகம் நடத்தினர். பின் நடந்த மகா தீபாராதனையில் ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர் முரளிதரன், மாவட்ட பொருளாளர் முருகேசன், நகர் தலைவர் மாரி, மாவட்ட பொதுசெயலாளர் ஜி.குமார், மாநில மகளிரணி துணை தலைவர் கலாராணி, பலர் பங்கேற்று தரிசித்தனர்.