உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காங்கயம்பாளையம் முருகன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

காங்கயம்பாளையம் முருகன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

சூலூர்: காங்கயம்பாளையம் சென்னியாண்டவர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.

சூலூர் அடுத்த காங்கயம் பாளையம் சென்னியாண்டவர் கோவில் பழமையானது. இங்கு கும்பாபிஷேக விழா முடிந்து மண்டல பூஜை நடந்து வந்தது. தினமும் சென்னியாண்டவருக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்று மண்டல பூஜை நிறைவு விழாவை ஒட்டி, சிறப்பு ஹோமம் நடந்தது. பக்தர்கள் பால் குடம், தீர்த்தக் குடங்கள் எடுத்து வந்தனர். தொடர்ந்து, முருகனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. மகா தீபாராதனையை அடுத்து சிறப்பு அலங்காரத்தில் சென்னி யாண்டவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவர் கோவிலை வலம் வந்தார். பக்தர்கள் பக்தி பாடல்களை பாடினர். சுற்றுவட்டாரத்தை ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !