வேலப்பர் கோயில் வளாகத்தில் பட்டுப்போன மரங்கள் அகற்றம்
ADDED :1240 days ago
ஆண்டிபட்டி: மேற்கு தொடர்ச்சி மலை மாவூற்று வேலப்பர் கோவில் வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பட்டுப்போன நிலையிலிருந்த மூன்று மாமரங்களை அப்புறப்படுத்தினர்.கோயில் வளாகத்தில் சமுதாய கூடம் எதிரில் பட்டுப்போன மூன்று மாமரங்கள் ஆபத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.பட்டுப்போன மரங்களை அகற்ற வனத்துறை, பசுமை குழு, வருவாய் துறை மூலம் அனுமதி பெற வேண்டியிருந்ததால்அப்புறப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அனுமதி கிடைத்ததால் ஹிந்து அறநிலையத்துறை வேலப்பர் கோயில் செயல் அலுவலர் நதியா,ஆய்வாளர் கார்த்திகேயன் மின் துறை,வருவாய் துறையினர் முன்னிலையில் பட்டுப்போன மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டது.