உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி லாஸ்பேட்டையில் திருப்பதி ஸ்ரீவாரி சீனிவாச திருக்கல்யாண உற்சவம்

புதுச்சேரி லாஸ்பேட்டையில் திருப்பதி ஸ்ரீவாரி சீனிவாச திருக்கல்யாண உற்சவம்

புதுச்சேரி : புதுச்சேரி லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

புதுச்சேரி-லாஸ்பேட்டையில் இன்று மாலை ஸ்ரீவாரி சீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண உற்சவ திட்டம் மற்றும் புதுச்சேரி ஸ்ரீவாரி திருக்கல்யாண சேவா டிரஸ்ட் சார்பில், இன்று 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் ஸ்ரீவாரி சீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதனையொட்டி நேற்று இரவு திருமலையில் இருந்து உற்சவர் புதுச்சேரிக்கு எழுந்தருளி, செல்ல பெருமாள்பேட்டை விவேகானந்தா பள்ளி வளாகத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெருமாளுக்கு இன்று விடியற்காலை முதல் சுப்ரபாத சேவை முதல் அனைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை4:15 மணிக்கு மங்கள இசையுடன் திருக்கல்யாண உற்சவம் துவங்கி, இரவு 9:00 மணி வரை நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவத்தை திருமலையில் இருந்து வரும் அர்ச்சகர்கள் நடத்தி வைக்கின்றனர். விழாவில், கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பஸ் நிலையத்தில் இருந்து லாஸ்பேட்டைக்கு இலவச பஸ் இயக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !