உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நிறை புத்தரி

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நிறை புத்தரி

மணவாளக்குறிச்சி : மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நேற்று காலை நிறைபுத்தரி நடந்தது. பக்தர்கள் தங்கள் வயல்களில் இருந்து நெற்கதிர்களை அறுவடை செய்து கொண்டு வந்து இறைவனுக்கு சமர்ப்பித்து பூஜை பண்ணும் நிகழ்ச்சி நிறைபுத்தரி என்று அழைக்கப்படுகிறது. சபரிமலை உள்ளிட்ட பிரபல கோயில்களில் இந்த நிறைபுத்தரி நேற்று நடத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலிலும் நிறைபுத்தரி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் ஆடி மாத நிறைபுத்தரி நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. காலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது 5 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சபிஷேகம், 5.30 மணிக்கு உதயமார்த்தாண்ட மூர்த்திக்கு பூஜை ஆகியன நடந்தது. 5.40 மணிக்கு அறுவடை செய்து கொண்டு வந்த நெற்கதிர்களை கோயில் முன் வைத்து பொங்கல் நிவேத்தியம் படைத்து பூஜை செய்யப்பட்டது. பின்னர் நெற்கதிர்களை கோயிலுக்குள் பூஜாரிகள் சுமந்து சென்று அம்மனுக்கு முன் படைத்தனர். தொடர்ந்து நெற்கதிர்கள் கோயில் கருவறையின் மேற்கூரையில் கட்டப்பட்டது. மேலும் நெற்கதிர் மற்றும் அவல் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
6 மணிக்கு அருகில் உள்ள ஸ்ரீகண்டன் சாஸ்தா கோயிலுக்கு நெற்கதிர்கள் கொண்டு செல்லப்பட்டு அங்கும் பூஜை செய்த கதிரை கோயில் கருவறையில் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கோயில் ஸ்ரீகாரியம் ஆறுமுகதரன், ஸ்ரீதேவி கலாமன்ற தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மகாலிங்கம், மண்டைக்காடு பஞ்., கவுன்சிலர் ஜெயசேகரன் உடபட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !