புனித அலங்கார அன்னை ஆலய விழா கொடியேற்றம்
ADDED :4847 days ago
சிவகங்கை:சிவகங்கை புனித அலங்கார அன்னை ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. புனித அலங்கார அன்னை ஆலய விழாவை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு, சிறப்பு திருப்பலி நடந்தது. மறை மாவட்ட பொருளாளர் மைக்கேல்ராஜ் கொடியேற்றினார்.
பங்கு தந்தை சேவியர், சவரிமுத்து முன்னிலை வகித்தனர். விழாவை முன்னிட்டு தினமும் மாலை 6 மணிக்கு ஆலயத்தில் சிறப்பு நவநாள் திருப்பலி நடக்கிறது. ஆக.,14 அன்று மாலை 6 மணிக்கு ஆயர் சூசைமாணிக்கம் தலைமையில் விழா திருப்பலியும், அதை தொடர்ந்து தேர்பவனியும் நடைபெறும்.ஆக.,15 அன்று காலை 8.30 மணிக்கு நன்றி திருப்பலியும், அதை தொடர்ந்து கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. சிவகங்கை அருள்சகோதரிகள், பங்கு பேரவை, இறைமக்கள் பங்கேற்றனர்.