சிலப்பதிகாரத்தில் காளிபூஜை
                              ADDED :1228 days ago 
                            
                          
                                           
இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில் காளிபூஜையைப் பற்றி கீழ்க்கண்டவாறு விவரித்துள்ளார்.  
பவுர்ணமி தோறும் காளி கோயிலில் பூஜைக்காக வேடர்கள் ஒன்று கூடி, வேடுவப் பெண் ஒருத்தியை காளியாக அலங்கரிப்பர். அவளது கூந்தலை பாம்புக்குட்டியால் கட்டி, காட்டுப்பன்றியின் கொம்பை மூன்றாம் பிறை போலவும், புலிப்பற்களை மாலையாகவும் அணிவிப்பர். புலித்தோலை ஆடையாக உடுத்தி, அப்பெண்ணை கலைமானின் மீது அமரச் செய்வர். அவள் முன்  படையல் இட்டு மலர்களைத் துாவி, வாசனை திரவியங்களை தீயில் இட்டு நறுமணம் கமழச் செய்வர்.