உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாளை ஆயிரத்தம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா துவங்கியது

பாளை ஆயிரத்தம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா துவங்கியது

பாளையங்கோட்டை : பாளை ஆயிரத்தம்மன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகவிழா யாகசாலை பூஜையுடன் நேற்று துவங்கியது.

பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா சிறப்பு வழிபாடுகடன் நேற்று தொடங்கியது. பாளையங்கோட்டை  ஆயிரத்தம்மன் கோயிலில் பல லட்சம் மதிப்பில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த பக்தா்கள் முடிவு செய்தனா். அதன்படி, திருப்பணிகள் நிறைவுற்ற நிலையில், கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜைகளுடன் நேற்று தொடங்கியது. காலையில் திருமுறை பாராயணம், மகா கணபதி ஹோமம், சுதா்சன ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன. இன்று (ஜூன் 23) காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, இரவு 11 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்டவை நடைபெறும். நாளை (ஜூன் 24) காலை 6 முதல் 7.16 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !