லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா துவங்கியது
ADDED :1210 days ago
நரங்சிங்கபுரம்: நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்த, நரசிங்கபுரம் கிராமத்தில் உள்ளது மரகதவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் கோவில். இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவலால் காரணமாக, பிரம்மோற்சவ விழா தடைபட்டிருந்தது.இந்நிலையில், இந்த ஆண்டு ஆனி பிரம்மோற்சவம் நேற்று, காலை 7:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவ விழாவில், தினமும், காலை 10:00 மணிக்கு உற்சவர் திருமஞ்சனமும், மாலை 6:00 மணிக்கு, பத்தி உலாத்தலும், ஆண்டன் சன்னதி மண்டபத்தில் ஊஞ்சல் சேவையும் நடைபெறும்.நாளை, காலை 6:00 மணிக்கு, கருடசேவையும், மாலை அனுமந்த வாகனத்தில் உற்சவமும் நடைபெறும்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 28ம் தேதி, காலை 7:15 மணிக்கு நடைபெறும்.