/
கோயில்கள் செய்திகள் / திரிபுரசுந்தரி உடனுறை செளந்தரேசுவரர் கோயிலில் ஆனி பிரம்மேற்சவ விழா 26ல் துவக்கம்
திரிபுரசுந்தரி உடனுறை செளந்தரேசுவரர் கோயிலில் ஆனி பிரம்மேற்சவ விழா 26ல் துவக்கம்
ADDED :1210 days ago
சென்னை: சென்னை, சைதாப்பேட்டை, வடதிருநாரையூரில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி உடனுறை செளந்தரேசுவரர் கோயிலில் ஆனி பிரம்மேற்சவ விழா வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 7.07.22 வரை நடைபெறும் விழாவில் சுவாமி தினமும் வெவ்வேறு வாகனங்களில் உலா வந்து அருள்பாலிக்கிறார். விழாவில் வரும் 28 ம்தேதி அன்று அதிகார நந்தி சேவையும், 02.07.22 அன்று திருதேர் உற்சவமும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனி திருமஞ்சனம், தீர்த்தவாரி 05.07.22 அன்று நடைபெறுகிறது. 07.07.22ல் உற்சவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது.