திருக்கோவிலூரில் மூலவர் சாய்பாபா வீதி உலா
ADDED :1210 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், தியாகிவடிவேல் நகரில் புதிதாக கட்டப்பட்ட சீரடி குபேர சாய்பாபா கோவில் மூலவர் வீதி உலா நடந்தது.
திருக்கோவிலூர், தியாகி வடிவேல் நகரில், புதிதாக சீரடி சாய்பாபா கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று காலை 10:00 மணிக்கு மூலவர் சாய்பாபா, மூலஸ்தான கோபுர கலசம் உள்ளிட்டவை கரிகோலம் எனப்படும் வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது. கோவில் நிர்வாகி சுப்பு தலைமையில், செயலாளர் பாலாஜி, பொருளாளர் வெங்கடேசன், வார்டு கவுன்சிலர் துரைராஜன் உள்ளிட்ட பலரும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். நிறைவாக கோவில் வளாகத்தில் முதல் கால பூஜைகள் துவங்கியது இன்று காலை 9:20 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.