திருச்செந்துார் இசக்கியம்மன் கோயில் கொடை விழா
ADDED :1210 days ago
திருச்செந்துார்: திருச்செந்துார்-குலசைரோடு, குறவன்மடம் இசக்கியம்மன் கோயில் கொடை விழா நடந்தது. கொடை விழாவை முன்னிட்டு கடந்த19ஆம் தேதி இரவு அம்மனுக்கு மாக்காப்பு தீபாராதனையும், 20ம் தேதி இரவு அம்மனுக்கு லேபன தீபாராதனையும் நடந்தது. 21ம் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அன்னதானமும் , இரவு சிறப்பு அலங்கார தீபாராதனையும், நள்ளிரவு படைப்பு தீபாராதனையும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை கொடை விழா கமிட்டி தலைவர் ரமணி அய்யர், செயலாளர் குமார் மற்றும் கமிட்டியினர், பக்தர்கள் செய்திருந்தனர்.