கோவையில் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் வாஸ்து பூஜையுடன் துவக்கம்
ADDED :1259 days ago
கோவை : கோவை கொடிசியா வெங்கடாஜலபதி நகரில், திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கட்டட பணி வாஸ்து பூஜையுடன் துவங்கியது
கோவை கொடிசியா வெங்கடாஜலபதி நகரில், திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கட்டுவதற்காக பூமி பூஜை, வாஸ்து பூஜை, கோநிவேதன ஆலய ஆரம்ப பூஜை சிறப்பாக நடைபெற்றது. சுந்தரராஜ பட்டாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.