உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏர்வாடியில் சந்தனக்கூடு ஊர்வலம்: ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்

ஏர்வாடியில் சந்தனக்கூடு ஊர்வலம்: ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி சுல்தான் செய்யது இப்ராகிம் பாதுஷா நாயகம் தர்காவில் மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா நடந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் அதிகாலை சந்தனக்கூடு விழா நடந்தது. காலை நான்கு சக்கர சப்பரத்தில் மின் விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தர்கா வளாகத்தை வந்தடைந்தது. ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த அனைத்து சமூக மக்கள், மலர் தூவி வரவேற்றனர். தர்காவை மூன்று முறை வலம் வந்த பின், தர்கா வாசலில் பார்வைக்கு சந்தனக்கூடு வைக்கப்பட்டது.  ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !