வழக்கறுத்தீஸ்வரர் கோவில் உண்டியல் வருவாய்ரூ.11 லட்சம்
ADDED :1268 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் உண்டியலில், 11.38 லட்சம் ரூபாய் கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளது. காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலையில் உள்ளது. இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு செல்கின்றனர். அவர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை, அறநிலையத் துறை உதவி ஆணயைர் முத்துரத்தினவேல் முன்னிலையில் எண்ணப்பட்டது. கோவில் ஆய்வாளர் கிருத்திகா மற்றும் செயல் அலுவலர் ஸ்ரீதர் ஆகியோர் பங்கேற்றனர். பக்தர்கள் செலுத்திய காணிக்கை, 11 லட்சத்து 38 ஆயிரத்து 605 ரூபாய் மற்றும் தங்கம் 15 கிராம், வெள்ளி 82 கிராம் கோவிலுக்கு வருவாயாக கிடைத்தது.