உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகன் கோவிலில் 11 நாட்களில் ரூ.32 லட்சம் உண்டியல் வசூல்

முருகன் கோவிலில் 11 நாட்களில் ரூ.32 லட்சம் உண்டியல் வசூல்

திருத்தணி : முருகன் கோவிலில், கடந்த 11 நாட்களில், 32 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக அளித்து உள்ளனர். ஆடி மாதம் என்பதால், வழக்கத்திற்கு மாறாக, திருத்தணி முருகன் மலைக் கோவிலுக்கு வரும் கூட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த 26ம் தேதி முதல், இம்மாதம், 5ம் தேதி வரை பக்தர்கள் உண்டியலில் அளித்த காணிக்கை நேற்று முன்தினம் காலை எண்ணப்பட்டது. இதில், 32,30,235 ரூபாய் ரொக்கம், 197 கிராம் தங்கம், இரண்டரை கிலோ வெள்ளி பொருட்கள் கிடைத்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !