உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் தமிழக கவர்னர் சாமி தரிசனம்

ராமேஸ்வரம் கோயிலில் தமிழக கவர்னர் சாமி தரிசனம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

இன்று காலை 5:30 மணிக்கு ராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு வந்த கவர்னர் ரவிக்கு, கோயில் குருக்கள் பூரண கும்ப மரியாதையுடன் அழைத்து சென்றனர். பின் சுவாமி சன்னதியில் நடந்த ஸ்படிகலிங்க பூஜையில் குடும்பத்துடன் கவர்னர் பங்கேற்று தரிசனம் செய்தார். பின் அக்னி தீர்த்தம் கடல், கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை கவர்னர், குடும்பத்துடன் நீராடினார். பின் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். பின் 7:15 மணிக்கு கோயில் இருந்து புறப்பட்ட கவர்னர் தனுஷ்கோடி அர்ச்சனைமுனை கடற்கரைக்கு சென்று கடல் அழகை கண்டு ரசித்து விட்டு, ராமேஸ்வரத்தில் உள்ள தங்கும் விடுதிக்கு திரும்பினார். பின் காலை 9 :30 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீடுக்கு சென்று கலாமின் பேரன் சேக்சலீம், உறவினர்களை சந்தித்து நலம் விசாரித்தார். இதனை தொடர்ந்து ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பு என்னுமிடத்தில் உள்ள அப்துல்கலாமின் நினைவிடத்தில் கவர்னர் ரவி அஞ்சலி செலுத்தி விட்டு காரில் மதுரை சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !