ஸ்ரீவைகுண்டத்தில் குமரகுருபரருக்கு மணிமண்டபம் கட்ட ஏற்பாடு
ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டத்தில் குமர குருபரருக்கு மணிமண்டபம் கட்டவேண்டும் என அரசுக்கு டிவிஎம் சேவா பாலம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஸ்ரீவைகுண்டத்தில் டிவி எம் சேவா பாலம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. குமரகுருபரர் சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள் ளியில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு குமர குருபரர் கலைக் கல்லூரி முதல்வர் சங்கர நாராயணன் தலைமை வகித்தார். ஸ்ரீவை., டவுண் பஞ். தலைவர் அருணாசலம், டிவிஎம் சேவா பாலம் நிறுவ னர் இருளப்பன், தலைவர் அங்குசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஸ்ரீவை., டவுண் பஞ். தலைவர் கந்தசிவசுப்பு, குமர குருபரர் சுவாமிகள் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி செயலாளர் சண்முகநாதன் உள்ளி ட்டோர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் ஸ்ரீ ஆதிகுமர குருபரர் சுவாமிகளுக்கு அவர் பிறந்த இடமான ஸ்ரீவை குண்டத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும், ஆதிச்சநல்லூர் வரலாற்று சிறப்பு மிக்க இடத்தில் 3000 ஆண்டு களுக்கு முன்னால் உள்ள வரலாற்றுக் கல்வெட்டுகள், முதுமக்கள் தாழி போன்ற வரலாற்றுச் சுவடுகளை அங்கேயே வைப்பதற்கு நினைவு அருங்காட்சியம் கட்டித்தர வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. டிவிஎம் சேவா பாலம் தூத்துக்குடி மாவட்ட பொறு ப்பாளர் விஜி, கள்ளபிரான் கோவில் ஸ்தலத்தார் வெங்கடாச்சாரி, குமர குருபரர் சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை யாசிரியர் முத்துசிவம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.