உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூத்தபெருமாள் அய்யனார் கோயில் மண்டல பூஜை

கூத்தபெருமாள் அய்யனார் கோயில் மண்டல பூஜை

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே புளியங்குடி கிராமத்தில் உள்ள கூத்தபெருமாள் அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் முடிந்து 48வது நாள் மண்டல பூஜை விழா நடந்தது. இதனை முன்னிட்டு காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் தொடங்கி சிறப்பு யாகசால பூஜை நடந்தது. கூத்தபெருமாள் அய்யனார் உட்பட பரிவார தெய்வங்களுக்கு சந்தனம், இளநீர், பன்னீர், திரவிய பொடி உட்பட 21 வகையான அபிஷேகங்கள் சிறப்பு பூஜை நடந்தது. அ.தி.மு.க., மாநிலங்களவை எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மர் தலைமை வகித்தார். பின்பு கிராமமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முதுகுளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !