களியக்காவிளை: மார்த்தாணட்ம் சந்திப்பு அருகே உள்ள கோதேஸ்வரம் கோயிலில் இவ்வருட திருவிழா கடந்த 24ம் தேதி அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது.தொடர்ந்து விநாயகர் அகவல், திருப்பாவை, சிவபுராணம், அபிராமி அந்தாதி, கந்தசஷ்டி கவசம், பாராயணம், மதியம் சுவாமி வலம் வருதல், மாலை 1008 சுமங்கலி பூஜை நடந்தது. இரண்டாம் திருவிழாவில் வழக்கமான பூஜைகள் மாலை சக்தி பூஜை நடந்தது. மூன்றாம் திருவிழாவில் நேற்று காலை சமயவகுப்பு மாணவ மாணவிகளின் பண்பாட்டு போட்டிகள்,மாலை 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. திருவிளக்கு பூஜையில் பிந்து ஸ்ரீ பிரகாஷ்விமலா புஷ்பராஜ், உள்ளிட்டோர் திருவிளக்கு ஏற்றி வைத்தனர். நெட்டாங்கோடு ஸ்ரீ சாரதேஸ்வரி ஆஸ்ரமம், யோகேஸ்வரி மீராபுரி மாதாஜி திருவிளக்கு பூஜையினை நடத்தினார். திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட மகளிருக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட்டது. இன்று சுதர்ச ன காயத்ரி ஹோமம், ஐந்தாம் நாள் விழாவில் ராகு கால துர்க்கா பூஜை , ஆறாம் நாள் விழாவில் திருமந்திர இசை சொற்பொழிவு, ஏழாம் நாள் விழாவில் குடும்ப ஐஸ்வர்ய பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோதேஸ்வரம் திருக்கோயில் திருவிழாக்குழுவினர். பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர்.