மொக்கணீஷ்வரர் கோவிலில் திருவாதிரை விசேஷ ஹோமம்
ADDED :1293 days ago
அவிநாசி: மொக்கணீஷ்வரர் கோவிலில், ஆனி மாத திருவாதிரையை முன்னிட்டு, விசேஷ ஹோமம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், குட்டகம் கிராமம், கூழேகவுண்டன்புதூரில் அமைந்துள்ள சுமார் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாணிக்கவாசக சுவாமிகளால், திருவாசகப் பாடல் பெற்ற ஸ்ரீமீனாட்சி அம்மன் சமேத ஸ்ரீமொக்கணிஷ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆனி மாத திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு கணபதி ஹோம மும்,தொடர்ந்து ருத்ர ஹோமம், ஏகாதச ருத்ர ஜப ஹோமமும், ஷோடஷ்ஷா அபிஷேகமும், பஞ்சமுக அர்ச்சனையும்,நவசக்தி அர்ச்சனையும்,மஹா உபசார பூஜைகளும் நடைபெற்றது. இதனையடுத்து, திருக்கோவில் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், சிவாச்சாரியார் பெருமக்கள், சிவபக்த மெய்யன்பர்கள் மற்றும் ஊர் பொது மக்களும் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.