உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜருக்கு ஆனி திருமஞ்சனம்

ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜருக்கு ஆனி திருமஞ்சனம்

ஸ்ரீபெரும்புதுார்: ராமானுஜருக்கு, ஆனி மாத திருமஞ்சனம் நடந்தது. ஸ்ரீபெரும்புதுாரில், வைணவ மகான் ராமானுஜரின் அவதார தலமான ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, தானுகந்த திருமேனியாக ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாதந்தோறும் திருவாதிரை நட்சத்திரம் அன்று, ராமானுஜருக்கு திருமஞ்சனம் எனும் சிறப்பு அபிஷேகம் விமரிசையாக நடைபெறும்.இந்நிலையில், ராமானுஜருக்கு ஆனி மாதம் திருவாதிரை திருமஞ்சனம், நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !