நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவ தீர்த்தவாரி
ADDED :1278 days ago
நரசிங்கபுரம்: நரசிங்கபுரம், லட்சுமி நரசிம்மர் கோவிலில், ஆனி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு, தீர்த்தவாரி நடந்தது.
கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்துள்ள நரசிங்கபுரம் கிராமத்தில் உள்ளது லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில்.இங்கு, ஆனி மாத பிரம்மோற்சவம், கடந்த 22ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கி தினமும், காலை 10:00 மணிக்கு, திருமஞ்சனமும், மாலையில், நரசிம்மர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். இந்நிலையில், ஆனி பிரம்மோற்சவம் ஒன்பதாவது திருநாளான நேற்று, நரசிம்மர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் அலங்கரிக்கப்பட்டு தங்கக் கவசம் அணிவித்து மற்றும் நரசிம்மருக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, துளசி மாலை அனிவித்து தீபாராதனை நடந்தது.