குருவாயூரில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் துவக்கம்
ADDED :1208 days ago
குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் உள்ள 30 யானைகளுக்கு, ஒரு மாத புத்துணர்வு முகாம் நேற்று துவங்கியது.
கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் உள்ள யானைகளுக்கு ஆண்டுதோறும் ஜூலையில் ஜீவதானம் என்ற பெயரில், புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது. இந்தாண்டு முகாம், புன்னத்தூர் கோட்டை பகவதி கோயில் வளாகத்தில் நேற்று துவங்கியது. இதை, தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் விஜயன் துவக்கி வைத்து, யானைகளுக்கு மூலிகை உணவு வழங்கினார். ஒரு மாதம் நடக்கும் முகாமில், அரிசி, பயறு, கொள்ளு, அஷ்டசூரணம், சவனப்பிராசம், மஞ்சள், உப்பு மற்று நவதானியங்கள் கலந்த உணவு வகைகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக, தேவஸ்தானம் சார்பில் 14 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.