உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசா பெருமாள் கோவிலில் அவதார உற்சவ விழா
உடுமலை; உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசா பெருமாள் கோவிலில் 4ம் ஆண்டு அவதார உற்சவ விழா நடந்தது.உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவிலின், நான்காம் ஆண்டு விழா நேற்றுமுன்தினம் துவங்கியது. இதையொட்டி, காலையில், ஸ்ரீ விஸ்வக்ேஷனர், ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ தன்வந்திரி பெருமாள், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனமும், மாலையில், ஸ்ரீ பத்மாவதி தாயார் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் திருமஞ்சனமும் நடந்தது.விழாவில், நேற்று 4ம் ஆண்டு அவதார உற்சவ விழா நடந்தது. காலை, 6:30 மணிக்கு ஹோமம், நவகலசஸ்தாபிதம், வேங்கடேசப்பெருமாள் மூலவர், உற்சவம் திருமஞ்சனம் இடம் பெற்றது.தொடர்ந்து நுால் வெளியீட்டு விழா, விேஷச அலங்கார பூஜை நடந்தது.மாலையில், ஸ்ரீ தேவி பூதேவி சமேத பெருமாள் உற்சவர் புறப்பாடும், பஜனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.