உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வ விநாயகர் கோயில் வருடாபிஷேக விழா

செல்வ விநாயகர் கோயில் வருடாபிஷேக விழா

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் உள்ள செல்வ விநாயகர் கோயில் இரண்டாம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. இதனைமுன்னிட்டு காலை 6 மணிக்கு கணபதி ஹோமம் தொடங்கி யாகசாலை பூஜைகள் நடந்தது.பின்பு மூலவரான விநாயகருக்கு பால், சந்தனம்,பன்னீர்,திரவியப்பொடி உட்பட 21 வகையான அபிஷேகங்கள் சிறப்பு தீபாரதனை நடந்தது. விழாவில் முதுகுளத்தூர் டி.எஸ்.பி., சின்னகண்ணு, இன்ஸ்பெக்டர் மோகன் உட்பட போலீசார் பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !