உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோயில் உற்ஸவ விழா

காளியம்மன் கோயில் உற்ஸவ விழா

அலங்காநல்லூர்: மதுரை காஞ்சரம் பேட்டை, பாறைப்பட்டியில் காளியம்மன் கோயில் உற்ஸவ விழா நடந்தது. கணபதி வழிபாடு செய்து கோயிலுக்கு பூஜாரி, சாமியாடிகள் அழைத்து வரப்பட்டனர். அம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட திரவ அபிஷேகங்கள், புஷ்ப அலங்காரம், தீபாராதனை நடந்தன. அக்னிச்சட்டி எடுத்தும், கிடாய் வெட்டி, பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !