உலக நன்மை வேண்டி சர்ப சாந்தி ஹோமம் , 1008 கலச பூஜை
ADDED :1386 days ago
மேலூர்: பூஞ்சுத்தியில் நாகதேவதை அம்மன் உலக மக்கள் அறக்கட்டளை சார்பில் உலக நன்மை வேண்டி சர்ப சாந்தி ஹோமம் மற்றும் 1008 கலச பூஜை விழா நடைபெற்றது. இந்து இளைஞர்கள் ஆன்மீக அறக்கட்டளையினர் தலைமை வகித்தனர். சக்ரவர்த்தி ஆச்சாரியார், ஊராட்சி தலைவர் ராமனாதன், கவுன்சிலர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திருநெல்வேலி ஸ்ரீமத் பரசமயகோளரிநாத ஆதினம் ஸ்ரீலஸ்ரீ புத்தாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள், சாது பாபு ஆச்சாரியார், இராமேஸ்வரம் ஹரி சிவனடியார் திருமடாலயம் ஸ்ரீலஸ்ரீ அகோரசிவம் கணேச சுவாமிகள், பிள்ளையார்பட்டி ஸ்ரீ நவாக்கரி சுவாமி உள்ளிட்டோர் ஆசியுரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.