சித்தப்பாறை லிங்கேஸ்வரர் கோயிலில் மண்டல பூஜை விழா
ADDED :1237 days ago
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு அருகே குமணன்தொழு சித்தப்பாறை லிங்கேஸ்வரர் கோயிலில் மண்டல பூஜை விழா மற்றும் ஐம்பொன் திரிசூலம் பிரதிஷ்டை விழா நடந்தது. இதில் 108 தீர்த்த அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் தீர்த்த குடம் கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிவ வீரசேகர் தேவாரம் சுவாமி, வெள்ளையங்கிரி சுவாமி ஆகியோர் பக்தர்களுக்கு ஆசி வழங்கினர். ஏற்பாடுகளை சமூக ஆர்வலர் பிரேமானந்தன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.