மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
1187 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
1187 days ago
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதிக்கு கால் வலி இருப்பதால் புது செருப்பு வழங்கப்பட்டுள்ளது. செருப்பு அணிய செல்லமாக மறுக்கிறது.
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் தேரோட்டம் வரும் 11ல் நடக்கிறது. தேரோட்டத்திற்கான கொடியேற்றம் இன்று ஞாயிறு காலை நடக்கிறது. நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதிக்கு 52 வயதாகிறது. அதிக எடை மற்றும் வயோதிகம் காரணமாக கால் வலியினால் ரதவீதிகளில் நடப்பதில் சிரமம் உள்ளது. கேரள மாநிலத்தில் யானைகளுக்கு செருப்பு அணிவிக்கும் பழக்கம் உள்ளதை அறிந்த பக்தர் ஒருவர் ஏற்பாட்டில் ரூபாய் 12000 செலவில் 4 தோல் செருப்புகள் திண்டுக்கல்லில் தயார் செய்யப்பட்டு கோவிலுக்கு வழங்கப்பட்டது. காந்திமதிக்கு செருப்புகளை பார்த்ததும் பயம் வந்துவிட்டது. யானைப் பாகன் ராமதாஸ் செருப்புகளை அணிவிக்க முயற்சித்தார். இருப்பினும் காந்திமதி மறுத்துவிட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் பயிற்சி அளித்து வரும் 11-ல் நடக்கும் தேரோட்டத்தில் யானை காந்திமதி திருநெல்வேலி ரத வீதிகளில் வலம் வரும் என கோயில் நிர்வாகத்தினர் நம்பிக்கை தெரிவித்தனர்.
1187 days ago
1187 days ago