உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பால்வண்ணநாத சுவாமி கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா

பால்வண்ணநாத சுவாமி கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா

திருவேங்கடம்: கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனையம்பாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோயிலில் இந்தாண்டிற்கான மாணிக்கவாசகர் குருபூஜை விழா நடந்தது. சங்கரன்கோவில் கோமதி அம்பிகை மாதர் சங்கம் சார்பில் நடந்த மாணிக்கவாசகர் குருபூஜையை முன்னிட்டு காலை யாகசாலை பூஜை, மாணிக்கவாசகருக்கு பல்வேறு அபிஷேக அலங்கார தீபாராதனை, விசேஷ பூஜை நடந்தது. பின் மாணிக்கவாசக சுவாமி நாற்காலி சப்பரத்தில் தீவட்டி மற்றும் கைலாய வாத்தியத்துடன் உள்பிரகாரத்தில் நடராஜர் சன்னதி வரை பவனி வந்து அங்கு கைலாய காட்சி பூஜையும் நடந்தது. ஏற்பாடுகளை சங்கரன்கோவில்  கோமதிஅம்பிகை மாதர் சங்கத்தினர் அமைப்பாளர் பட்டமுத்து, கரிவலம்வந்தநல்லூர் சுந்தரமூர்த்திநாயனார் அடியார் திருக்குழாமினர், அர்ச்சகர்கள், கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !