திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் முற்றோதல் நிகழ்ச்சி
ADDED :1279 days ago
திண்டிவனம் : திண்டிவனம் திந்திரிணீஸ் வரர் கோவிலில் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில் திருவாசக குழு சார்பாக நேற்று காலை முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்வேறு பகுதியிலிருந்து வந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து பிற்பகல் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு குரு பூஜை நடந்தது. விழா ஏற்பாடுகளை திந்திரிணீஸ்வரர் கோவில் திருவாசக குழுத் தலைவர் பாலாஜி மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.