நவநீத கிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1520 days ago
அலங்காநல்லூர்: மதுரை பொதும்பு கிராமத்தில் ருக்மணி சத்யபாமா சமேத நவநீத கிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 4ம் கால பூஜையை தொடர்ந்து கோயில் மூலஸ்தான கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் கோயில் கோபுர கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றினர். சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை குருநாதன் சேர்வை வகையறாக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.