ஆனி திருமஞ்சனம் : சிவாலயங்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1290 days ago
திருப்பூர்: திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சன அபிஷேகம் நடந்தது.
சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று மார்கழித்திருவாதிரை. மற்றொன்று ஆனி உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் திருமஞ்சனம். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். இன்று ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு, சிவாலயங்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.