உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளையாட்டு மாரியம்மன், மந்தை முனியப்பன் சுவாமி கும்பாபிஷேகம்

விளையாட்டு மாரியம்மன், மந்தை முனியப்பன் சுவாமி கும்பாபிஷேகம்

ஈரோடு : சத்தியமங்கலம் வடக்குபேட்டை கிட்டே கவுடர் வீதியில் ஸ்ரீவிளையாட்டு மாரியம்மன், மந்தை முனியப்பன் சுவாமி, கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக ஜீலை 4ம் தேதி காலை மகா கணபதி ஹோமம், கோ, பூஜை, பவானி ஆற்றிலிருந்து தீர்த்தம், மற்றும் முளை பாலிகை எடுத்து வந்தனர். செவ்வாய் காலை ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், அங்குரார் பணம், அதை தொடர்ந்து விமான கலச அபிஷேகம், பூத சுத்தி , கும்பாலங்காரம், கலச குடம் யாகசாலை பிரவேசம் நடைபெற்றது. இன்று அதிகாலை 4.30 க்கு ஸ்ரீ விளையாட்டு மாரியம்மன், மந்தை முனியப்பன் சுவாமிகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடை பெற்றது. அதை தொடர்ந்து காலை  5 மணி முதல் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கு வடக்கு பேட்டை, குள்ளங்கரடு, புளியங் கோம்பை, வரதம் பாளையம், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு ஆர்கெஸ்ட்ரா, நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !