உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புவனம் கோயில் தேர் முழுவதும் போஸ்டர்கள், பக்தர்கள் வேதனை

திருப்புவனம் கோயில் தேர் முழுவதும் போஸ்டர்கள், பக்தர்கள் வேதனை

திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான தேர் முழுவதிலும் பலரும் கண்ணீர் அஞ்சலி, நினைவஞ்சலி போஸ்டர்கள் ஒட்டுவதால் பக்தர்கள் வேதனைக்குள்ளாகி வருகின்றனர். காசியை வீட அதிகம் புண்ணியம் பெற்ற ஸ்தலம்.

மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற ஸ்தலம் உள்ளிட்ட சிறப்புகளை பெற்ற புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் பங்குனி திருவிழா 10 நாட்கள் நடைபெறும் 10ம் நாள் நான்கு ரத வீதிகளையும் வலம் வரும். தேரோட்டத்திற்கு பின் தேரடி வீதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்படும் . தேரை சுற்றி உள்ள பாதுகாப்பு தகரத்தில் பலரும் போஸ்டர்களை ஒட்டி அசிங்கப்படுத்துகின்றனர். பக்தர்கள் பலரும் தினசரி தேரை வணங்கி செல்லும்போது நினைவஞ்சலி போஸ்டர்களை கண்டு வேதனை படுகின்றனர். எனவே போஸ்டர்கள் ஒட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் . பக்தர்கள் தேரை தரிசனம் செய்ய வசதியாக கண்ணாடி கூண்டு அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !