திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரமோற்சவம்: சுவாமி உலா
ADDED :1519 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரமோற்சவ உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவத்தில், மூன்றாம் நாளில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மாட வீதி உலா வந்து அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று விடுமுறை தினம் என்பதால், இன்று கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.