கனிவான உபசரிப்பு
ADDED :1197 days ago
வெளியூரில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான் அகமது. பசி வயிற்றைக் கிள்ளவே சாலையோரத்தில் இருந்த ஓட்டலுக்குள் நுழைந்தான். கூட்டம் அதிகம் இருந்தது. உள்ளே சென்ற அவனிடம் அரைமணி நேரமாகும் என எரிச்சலுடன் சர்வர் கூறினார். வெளியேறிய அவன் துாரத்தில் கடை ஒன்றை பார்த்தான். அங்கு சென்று அக்கடையில் உள்ள பெண்மணியிடம் சாப்பாட்டின் விலை என்ன எனக் கேட்டான். முதலில் சாப்பிடுப்பா, பிறகு பார்க்கலாம் என்றார். அவரது அணுகுமுறை அவனை கவர்ந்தது. சாப்பிடும் போது இன்னும் வேண்டுமா என கேட்டு, கேட்டு பரிமாறினார். அவனது மனமும், வயிறும் நிறைந்தன. இது பெரிய ஓட்டலாக மாற வேண்டும் என மனதிற்குள் பிரார்த்தனை செய்தான் அகமது.