ஆனி பவுர்ணமி : திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்
ADDED :1554 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் வருகை தருகின்றனர். இதில், மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். ஆனி மாத பவுர்ணமி திதி, நாளை, 13ம் தேதி அதிகாலை, 3:20 மணி முதல், 14ம் தேதி காலை,12:47 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.