சமயபுரம் மாரியம்மன் கோயிலில் முளைக்கட்டு உற்ஸவம்
ADDED :1291 days ago
திருப்புல்லாணி, திருப்புல்லாணி அருகே இந்திரா நகரில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 18ஆம் ஆண்டு முளைக்கொட்டு உற்ஸவ விழா நடந்தது. கடந்த ஜூலை 3ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மூலவர் அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் நடந்தது. இன்று மாலை கோயிலில் அக்னி சட்டி, வேல் காவடி உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் எடுத்தனர். நாளை மாலை 4 மணி அளவில் முளைப்பாரி ஊர்வலம் சென்று சேதுக்கரை கடலில் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. ஏற்பாடுகளை திருப்புல்லாணி இந்திராநகர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.