விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் பிரதோஷ பூஜை
ADDED :1380 days ago
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ஆனி பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது.
விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ஆனி பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று (11ம் தேதி) அம்மன், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. பிரதோஷத்தை நந்திகேஸ்வர பெருமானுக்கு நந்திகேஸ்வரருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் நடந்தது. நடந்த வழிபாட்டில் கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.