உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரூர் ஆதினத்திடம் ஆசி பெற்ற மத்திய அமைச்சர்

பேரூர் ஆதினத்திடம் ஆசி பெற்ற மத்திய அமைச்சர்

பேரூர்; பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரை சந்தித்து, மத்திய இணை அமைச்சர் முருகன் ஆசி பெற்றார்.

பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்திற்கு, மத்திய இணை அமைச்சர் முருகன், மாலை வந்தார். அங்கு, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு, பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பரிசளித்தார். அதன்பின், பேரூரில் நேற்று கும்பாபிஷேகம் நடந்த அரசம்பலவாணர் கோவிலுக்கு மத்திய அமைச்சர் முருகன் சென்று சுவாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வெளியே இருந்த பசு மாட்டிற்கு, அகத்திக் கீரை கொடுத்து வழிபட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !