உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  குன்றத்துார் வெள்ளீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா

 குன்றத்துார் வெள்ளீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா

குன்றத்துார்: குன்றத்துார் அருகே மாங்காட்டில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் அருகே வெள்ளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நவக்கிரக தலங்களில், சுக்ரன் பரிகார தலமாக இக்கோவில் உள்ளது.

வெள்ளீஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவ விழா, கடந்த 20ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து, தினமும் காலை – மாலை சுவாமி வீதியுலா வந்தார். விழாவின் ஏழாம் நாளான காலை, அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளினார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !