உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  விழுப்புரம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

 விழுப்புரம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

 விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அய்யூர் அகரம் துங்கபத்திரை கோதாவரி திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.

விழாவையொட்டி, கடந்த 21ம் தேதி அரக்கு மாளிகை மற்றும் 22ம் தேதி பக்காசுரன் சண்டை நடந்தது. தொடர்ந்து, 23ம் தேதி இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 24ம் தேதி தவசு திருவிழா, 25ம் தேதி காலை அரவான் பிரதிஷ்டை மற்றும் இரவு கரக திருவிழா நடந்தது. இதையடுத்து, நேற்று 26ம் தேதி பகல் 12:00 மணிக்கு அர்ஜூனன் மாடு மிரட்டுதல், மாலை 4:00 மணிக்கு திரவுபதியம்மன் மாடவீதியாக மடிகட்டும் வைபவம் நடந்தது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இன்று 27ம் தேதி மாலை 5:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !