முத்துமாரியம்மன் கோவிலில் முளைப்பாரி விழா
ADDED :1510 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் கீழத்தெரு, முத்துமாரியம்மன் கோவில், முளைப்பாரி விழாவை முன்னிட்டு, பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக கரக ஊர்வலம் எடுத்துச் சென்றனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.