உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல்: வேட்டாம்பாடி ஸ்ரீசெல்வ கணபதி மற்றும் தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம்

நாமக்கல்: வேட்டாம்பாடி ஸ்ரீசெல்வ கணபதி மற்றும் தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம்

நாமக்கல் மாவட்டம், வேட்டாம்பாடி கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ செல்வ கணபதி, ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீசெல்லியம்மன், ஸ்ரீகன்னிமார் மற்றும் கருப்பணார் சுவாமிகளின் மஹா கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது.

காலை யாக சாலை பூஜை மற்றும் பூர்ணாஹூதி முடிந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. ஸ்ரீசெல்வ கணபதி மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும்
கலச தீர்த்தம் ஊற்றப்பட்டு இனிதே மஹா கும்பாபிஷேகம் நிறைவு பெற்றது.

இதை கண்டு பக்தி பரவசத்தில் பக்தர்கள் மெய்சிலிர்த்து நின்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !