சோமவார பிரதோஷம் சிறப்பு பூஜை
ADDED :1382 days ago
வாடிப்பட்டி: நாகமலைபுதுக்கோட்டை ஆனந்த ஐயப்பன் கோயிலில் சோமவார பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடந்தது. உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகளை சுந்தர் பட்டர் செய்தார். முன்னதாக நந்தியம்பெருமானுக்கு பால், தயிர் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை குருசாமி சோமசுந்தரம் செய்திருந்தார்.